8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், ''தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடியமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 31-ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.