தமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

சென்னை, நாகை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, கீழ்வேளுர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பருத்தி பயிர் நன்று வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால், கிணற்று நீரைக் கொண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் நன்கு வளரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே வேளையில் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த சாரல் மழையினால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com