கர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி, கே.ஆர்.எஸ் அணையிலிருந்து உபரி நீர் திறந்திருப்பதால், பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து 8400 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் சுமார் 52௦௦ கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் 7200 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்துவிட்டது.

தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினியிலிருந்து 5200 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4000 கன அடி இந்த இரு அணைகளிலிருந்து கடந்த சில வாரத்திற்கு முன்பு சுமார் 9200 கன அடி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்காளாக சுமார் 7000 கன அடிக்கு மேல் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வரை 7500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று காலை 9:00 மணிக்கு தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு சுமார் 8400 கன அடி தண்ணீர் வந்தடைந்தது.

இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com