டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கியுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

