சென்னையில் தொடர்கிறது மழை

சென்னையில் தொடர்கிறது மழை
சென்னையில் தொடர்கிறது மழை

சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது.  சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்த மழை, நேற்று இரவு மீண்டும் தொடங்கியது. சற்று நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. காலையிலும் தொடர்ந்து பெய்துவருகிறது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, மைலாப்பூர், ராயப்பேட்டை , போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே போல, திருவள்ளூர் மாவட்டத்திலும் விடிய விடிய மழை பெய்தது, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புழல், செங்குன்றம், திருவள்ளூர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com