\
சென்னையில் பலத்த காற்றுடன் மழை

சென்னையில் பலத்த காற்றுடன் மழை

சென்னையில் பலத்த காற்றுடன் மழை
Published on

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக ம‌ழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் வெயில் அடித்து வெப்பம் வாட்டியது. எனினும் இரவில் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வட‌ழனி, கோயம்பேடு, போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

இதேபோல் குரோம்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்தது. இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்தது. 

இதனால் காய்ந்து வந்த கடலை செடிகள் மீண்டும் உயிர்பெருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com