கலையாத மேகங்கள்.. இரவில் சாரல் மழை... இது குளு குளு சென்னை..!

கலையாத மேகங்கள்.. இரவில் சாரல் மழை... இது குளு குளு சென்னை..!

கலையாத மேகங்கள்.. இரவில் சாரல் மழை... இது குளு குளு சென்னை..!
Published on

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது.

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால், தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் தமிழகம், புதுவையில் தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. ராமாபுரம், பம்மல், வளசரவாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை, போரூர், மீனம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றிரவும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com