பரவலாக மழை... குளிர்ச்சியாக மாறிய சென்னை..!

பரவலாக மழை... குளிர்ச்சியாக மாறிய சென்னை..!

பரவலாக மழை... குளிர்ச்சியாக மாறிய சென்னை..!
Published on

சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை குளிர்ச்சியாக மாறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல இடங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை குளிர்ச்சியாக மாறியுள்ளது.

இதனிடையே, ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 86 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட 27 சதவீதம் கூடுதல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com