\
ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி!
Published on

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அல்லிநகரம், அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்மழையால் கண்மாய்கள், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், மானாவரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

மஞ்சளாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அணையின் நீர்மட்டமும் வேக வேகமாக உயர்ந்து, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போல், முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com