சென்னையில் திருவல்லிக்கேணி, அம்பத்தூர், கொளத்தூர், அமைந்தகரை, பெரம்பூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாக்கல் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையோடு பலத்த காற்றும் வீசுகிறது. சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றன.
கோவையில் அவிநாசி, கைகாட்டிப்புதூர், பழங்கரை, காசிகவுண்டன்புதூர், குரும்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொட்டும் மழையில் விநாயகர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
சிவகாசி அருகே ஆனையூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் சுமார் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 4500 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. நிவாரண உதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.