\
கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கைfile photo

26 மாவட்டங்களில் மழை தொடரும் என கணிப்பு!

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 26 மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால், 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 21 முதல் 23 வரை மழை தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று முதல் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது.

சென்னையில் கனமழை
சென்னையில் கனமழைpt

இதன்காரணமாகவே இன்று இரவு சென்னை மற்றும் அதனைசுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டித்தீர்த்துள்ளது. அதன் தாக்கமாக இன்று வடகடலோரம், தென் கடலோரத்தில் கன முதல் மிககனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பும், முற்பகலில் உள் மாவட்டங்களிலும் மழை துவங்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

இந்தசூழலில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று பகல் 1 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வானிலை மையம் அப்டேட்டின் படி, சென்னை. செங்கல்பட்டு, அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர். காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர். திருவாரூர், நீலகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி. திருச்சி, திருப்பத்தூர். திருப்பூர், திருவண்ணாமலை. வேலூர். விழுப்புரம் ஆகிய 26 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com