\
சென்னையில் தொடர்ந்து இரவில் பெய்யும் மழை: கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கோரிக்கை

சென்னையில் தொடர்ந்து இரவில் பெய்யும் மழை: கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கோரிக்கை

சென்னையில் தொடர்ந்து இரவில் பெய்யும் மழை: கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கோரிக்கை
Published on

சென்னையின் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

சென்னையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவில் சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதேபோல் போரூர், முகப்பேர், வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் மழை பெய்தது.

தொடர்ந்து 3ஆவது நாளாக சென்னையில் இரவில் மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனிடையே ஆங்காங்கே கழிவுநீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com