\
தமிழகத்தில் ‌அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ‌அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ‌அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால், கடந்த 24 மணி நேரத்தில் போளூரில் 14 சென்டிமீட்டரும், திண்டிவனத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக‌ அவர் கூறினார்.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com