\
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சத்தீவு, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com