தமிழ்நாடு
3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும், தொண்டி பகுதியில் 11 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.