\
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மே 26இல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மே 26இல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மே 26இல் கனமழைக்கு வாய்ப்பு
Published on

வெப்பச்சலனம் காரணமாக வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, தெற்கு கேரளா, மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com