நள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை.. ஜில்லென்று மாறிய சென்னை..!

நள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை.. ஜில்லென்று மாறிய சென்னை..!

நள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை.. ஜில்லென்று மாறிய சென்னை..!
Published on

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சென்னையில் நேற்று மாலைமுதல் சூளைமேடு, அரும்பாக்கம், போரூர், தாம்பரம், அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பின்னர் நள்ளிரவிலும் தொடர்ந்த மழை சூறைக்காற்றுடன் பெய்தது. ராமாபுரம், நெற்குன்றம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது.

இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாவட்டம் லால்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைக்கிராமங்களிலும் பெய்த மழையால் மிளகு, காப்பி, ஏலக்காய் உள்ளிட்ட பயிர் விளைச்சல் பயன்பெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல், தருமபுரி, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பரவலா‌க மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வெப்பம் தனிந்து குளிச்சியான காலநிலை நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com