5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
pt web
தமிழ்நாடு
Rain Alert | 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

