\
இரவு பணியின்போது ரயிலில் சிக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு 

இரவு பணியின்போது ரயிலில் சிக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு 

இரவு பணியின்போது ரயிலில் சிக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு 
Published on

வேலூர் மாவட்டம் பச்சூர் அருகே ஒப்பந்த ரயில்வே ஊழியர் இரவு பணியின்போது ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ரயில்நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சுஜித் கான் என்பவர் தனியார் ரயில்வே ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் நேற்று அவர் இரவுப்பணிக்காக பச்சூர் ரயில் நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுஜித் கான் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை துண்டித்து தனியாக கிடப்பதால் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com