\
மின்விளக்கு இல்லை: மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

மின்விளக்கு இல்லை: மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

மின்விளக்கு இல்லை: மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
Published on

திருவள்ளூர் அருகே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கொத்தியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுமணி (35). இவர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதயில் தங்கி காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு புட்லூர் பகுதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் சென்று விட்டு திரும்பியபோது, புட்லூர் ரயில்வே கேட் அருகே மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அவர் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலுமணியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மக்கள் கூறும் போது “ மேம்பால பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்களுக்காக எந்தவித  பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவும், மின் விளக்குகள் அமைக்காதது தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட காரணம் எனவும்” குற்றம்சாட்டினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com