வேலூரில் விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலம் - 60 சதவீத பணிகள் நிறைவு

வேலூரில் விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலம் - 60 சதவீத பணிகள் நிறைவு
வேலூரில் விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலம் - 60 சதவீத பணிகள் நிறைவு

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலத்தின் சீரமைப்புப் பணிகள் 60 விழுக்காடு வரை நிறைவு பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் அமைந்துள்ளது. அதிவிரைவு ரயில்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வந்த நிலையில், அண்மையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளான நிலையில், பாலத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 60 சதவிகித சீரமைப்பு பணிகள் முடிந்திருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சேதமான பாலத்தின் 39-ஆவது தூணை சுற்றி, 3 அடி ஆழத்திற்கு சிமெண்ட் கலவை மூலம் கான்கிரீட் போடப்பட்டு தூண் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விரிசல் ஏற்பட்ட தூண்களுக்கு இடையே தற்காலிகமாக இரும்பு கட்டுமானம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிசல் உள்ள பகுதிகளில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டு, அதன் வழியாக சிமெண்ட் கலவையை செலுத்தி பாலத்தை உறுதியாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. நாளைக்குள் பணி முழுமையாக முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மீண்டும் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com