தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
Published on
ஜூன் 1  ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என அண்மையில் அறிவித்தது. முன்னதாக  ரயில்வே துறை  அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. 
 
 
இதனிடையே கடந்த 23 ஆம் தேதி தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.  அந்தக் கோரிக்கையில் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
 
 
இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com