ரயில் பாதையில் பாறாங்கற்கள்: வைகை எக்ஸ்பிரஸ் 1 மணிநேரம் தாமதம்

ரயில் பாதையில் பாறாங்கற்கள்: வைகை எக்ஸ்பிரஸ் 1 மணிநேரம் தாமதம்
ரயில் பாதையில் பாறாங்கற்கள்: வைகை எக்ஸ்பிரஸ் 1 மணிநேரம் தாமதம்

கொடைரோடு அருகே தொடர் மழை காரணமாக பாறாங்கற்கள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணிநேரம் தாமதமானது.


திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதுரையிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாக கொடைரோடு அம்பாத்துரை இடையே செல்லும் ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளன.

அப்போது மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை அந்தவழியாக வரும்போது தண்டவாளத்தில் பாறைகள் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக கொடைரோடு அம்பாத்துறை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். 


இதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் ரயிலில் பயணித்த பயணிகளுடன் இணைந்து பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பணி முடிந்ததும், வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 1மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓட்டுநர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com