மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் இன்று அதிகாலை ரயில் மறியல் நடைபெற்றது.

மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். தண்டவாளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்த ஓட்டுனர் சற்று முன்பே ரயிலை நிறுத்தினார்.

பின்னர் காவல் துறையினர் அனைவரையும் தண்டவாளத்தை விட்டு நடைமேடைக்கு ஏற்றினர். ஆனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான விரோத சட்டங்களை திரும்பப் பெறு. விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை வாபஸ் பெறு. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து என முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com