\
சென்னை-குமரி இடையே கடல்வழி ரயில் பாதை

சென்னை-குமரி இடையே கடல்வழி ரயில் பாதை

சென்னை-குமரி இடையே கடல்வழி ரயில் பாதை
Published on

சென்னை-கன்னியாகுமரி இடையில் கடல்வழியாக இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். 

சென்னையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இருப்புப் பாதை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்றும் சுரேஷ் பிரபு கேட்டுக்கொண்டார். வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான ரயில் பாதை பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். விழாவில் சென்னை-திருவொற்றியூர் இடையிலான 4ஆவது ரயில் பாதையை அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com