\
தென்தமிழகத்துக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

தென்தமிழகத்துக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

தென்தமிழகத்துக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதவராக சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுரையில் ரயிலை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் தென்தமிழகத்துக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மதுரை செல்லூர் அருகே கோவை- நாகர்கோவில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பாலத்தில் பயணிகள் ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்மாவட்டத்துக்கு செல்லும் ரயில்களின் முக்கிய பாதையாக இருக்கும் மதுரை ரயில் நிலையம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com