டிராவல்ஸ் அதிபர் வீட்டில் கட்டுகட்டாக பணம்

டிராவல்ஸ் அதிபர் வீட்டில் கட்டுகட்டாக பணம்

டிராவல்ஸ் அதிபர் வீட்டில் கட்டுகட்டாக பணம்
Published on

சென்னையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 2 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. 

வேளச்சேரியிலுள்ள டிராவல்ஸ் உரிமையாளர் தமிழன் என்பவரது வீட்டில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, 2 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அதுபற்றி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், டிராவல்ஸ் உரிமையாளர் தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
2 கோடி ரூபாய் பணத்திற்கு முறைப்படி வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகளிடம் டிராவல்ஸ் அதிபர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com