தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக தூத்துக்குடிக்கு பரப்புரைக்கு சென்றால் கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் விடுதியில் தான் மு.க.ஸ்டாலின் தங்குவார். இந்நிலையில் தற்போது அந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.