’’உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன்!’’ - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

’’உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன்!’’ - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்
’’உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன்!’’ - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று மதியம் 12 மணியளவில் அவர் மதுரை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்ததுடன், தான் தமிழகம் வருவதையும் தமிழிலேயே ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார் ராகுல்.

அவர், ‘’அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com