ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்திPt web

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ராகுல்?.. திமுக கூட்டணியில் உடன்பாடு இல்லையா?

காங்கிரஸ் முன்னனி தலைவர் ராகுல்காந்தி இதுவரை ஒருமுறை கூட தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வராத நிலையில், அவர் தமிழக தேர்தலை புறக்கணிக்கிறாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் முதல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரை தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அதோடு கடந்த இரண்டு மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை தமிழகத்திற்கு வருகை தந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி வரும் ஏப்ரல் 15 அன்று மீண்டும் மாநிலத்திற்கு வருகை தந்து, நாகர்கோவிலில் NDA வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி
மோடிpt web

ஆனால் இதற்கு நேர்மாறாக, காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முகமாக திகழும் ராகுல்காந்தி இப்போதுவரை ஒருமுறை கூட தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரத்துக்கு வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தவெக கட்சியை தொடங்கியதும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்றதாக பேசப்பட்டது. அக்கட்சியின் சில தலைவர்கள் கூட வெளிப்படையாக தவெகவுடன் இணையவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். திமுக கூட்டணியிலும் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கோரியதோடு, ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தது. இந்த விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே பல்வேறு காட்டமாக கருத்துக்கள் பொதுவெளியில் பேசப்பட்டன.

ஸ்டாலின், ராகுல் காந்தி
தலைமைச்செயலர் அதிரடி மாற்றம் | பதவிக்கு வந்த EPSஇன் தனிச்செயலர்.. திமுக அமைச்சர்களுக்கு சிக்கலா?

இதுபோன்ற சூழலில் வழக்கமாக ஸ்டாலினை சகோதரர் என்று சொல்லும் ராகுல்காந்தி, இந்த முறை ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, சகோதரர் என்று சொல்லாமல் வெறுமனே தமிழக முதல்வர் என்று கூறினார். பதிலுக்கு முதல்வரும் சகோதரர் என்று கூறாமலேயே நன்றி தெரிவித்தார். இது பேசுபொருளாகியது. இரண்டு நாளுக்கு முன்னர் கூட புதுச்சேரியில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டாலும் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை.

ஸ்டாலின் - ராகுல் காந்தி
ஸ்டாலின் - ராகுல் காந்திPt web

மேலும் ராகுல் காந்தி தனது பேச்சில் ஸ்டாலினின் பெயரை கூட கூறவில்லை. அதேபோல், புதுச்சேரி கூட்டத்தில் ஸ்டாலினும் ராகுலின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சுமூக உறவு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் சகோதரர் ராகுல்காந்தியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கோரி வருகிறார்.

தொடக்கத்தில் கேரளா, அசாம் மாநிலங்களில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் இருந்ததால் அவர், தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அந்த மாநிலங்களில் பிரசாரம் முடிவடைந்த நிலையிலும், ராகுல் காந்தியின் தமிழக பிரசாரம் குறித்து காங்கிரஸ் சார்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி தொடர்பாக இதுவரை அவர் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் ராகுல்காந்தி தமிழக பிரசாரத்துக்கு முக்கியம் கொடுக்காமல் புறக்கணிக்கிறாரா என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.

ஸ்டாலின், ராகுல் காந்தி
தொகுதி அலசல் | சோழர் காலம் முதல் இன்றைய தேர்தல் வரை.. விழுப்புரம் ஓர் விரிவான பார்வை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com