ஆர்.எஸ்.எஸ்.தலைவர்
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் முகநூல்

"ராமர் ஆலயம்... இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்' - ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்!

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட்ட நாளில்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார்
Published on

இந்தியாவின் சுதந்திரம் பற்றி ஆர்.எஸ். எஸ்.தலைவர் கூறியது தேசத் துரோகம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட்ட நாளில்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து தேசத்துரோகம் எனத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ளார். அரசியல் அமைப்புச்சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் செல்லாது என்பது மோகன் பகவத் பேச்சிலிருந்து தெரிவதாக கூறியுள்ள ராகுல்காந்தி, பொதுவெளியில் இவ்வாறு பேச அவருக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர்
Headlines|அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் வரை!

வேறு எந்த நாட்டிலாவது இவ்வாறு பேசியிருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பார் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com