தமிழ்நாடு
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
தமிழகத்தில் 3-வது நாளாக ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கரூர் வாங்கல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது விவசாயி ஒருவர் பழைய செல்லாத 500 ரூபாய் நோட்டு ஒன்றை ராகுல்காந்தியிடம் கொடுத்தார். அதனை வாங்கிய ராகுல்காந்தி, ‘இந்த 500 ரூபாயை எனது சகோதரரான விவசாயியிடம் இருந்து பிரதமர் மோடி அரசு திருடியுள்ளது” எனச் சாடினார்.