இலவசக் கல்வி தருபவர்களுக்கு வாக்களியுங்கள்: ராகவா லாரன்ஸ்
தேர்தல்களில் இலவச பொருட்கள் மற்றும் பணத்திற்காக வாக்களிக்காமல் இலவச கல்வி வழங்குவதாக கூறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என நடிகர் லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. விழாவில் நடிகர் லாரன்ஸ் கலந்துக் கொண்டு கட்டிட பணியை தொடங்கி வைத்தார். அவா் பேசும் போது, சேலத்தில் ஜல்லிகட்டின் போராட்டத்தின் போது உயிரிழந்த லோகேஸ் அம்மாவின் மகனாக நான் அவர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளேன். நீட் அனித்தாவிற்க்கு ஒரு அண்ணன் என்ற முறையில் நூலகம் கட்டி கொடுக்க இங்கு வந்துள்ளேன்
தேர்தலில் யாரும் மிக்சி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட இலவச பொருட்களுக்கு ஓட்டு போட வேண்டாம். கல்வி, மருத்துவம் யார் இலவசமாக தருவார்களோ அவர்களுக்கு மட்டும் வாக்களிவுங்கள் என மக்களை கேட்டு கொண்டார். விழாவில் அதிமுக குன்னம் சட்டமன்ற உறுப்பினா் ராமச்சந்திரன், திமுக முன்னால் சட்ட மன்ற உறுப்பினா் சிவசங்கா் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.