வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கோண்டனர்.
இதில் பேசிய சமகவின் துணைப்பொதுச்செயலாளர் விவேகானந்தா, வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது வேளச்சேரி தொகுதியில் திமுகவின் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏவாக உள்ளார்.