தமிழ்நாடு
ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு
ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அப்பாவு, கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில், மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இம்முறை மீண்டும் வெற்றிவாகை சூடிய இவர், சபாநாயகராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்தது.
சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்திற்கு சென்று சந்தித்துப் அவர் பேசினார். இதேபோல், துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி முன்னிறுத்தப்படுவார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.