\
ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம் 

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம் 

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம் 
Published on

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் எண்ணுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரையும் திமுக சார்பில் அப்பாவுவும் வேட்பாளராக களமிறங்கினர். அப்போது இன்பதுரை 69, 590 வாக்குகளும் அப்பாவு 69 541 வாக்குகளும் பெற்றனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். 

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளுக்கு மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com