அதிகரிக்கும் கொரோனா... மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

அதிகரிக்கும் கொரோனா... மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்
அதிகரிக்கும் கொரோனா... மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், இந்தியாவில் மே 27 ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 15,708 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் ஜுன் 3 ஆம் தேதி வரையில் 21,055 பேருக்கு தொற்று ஏற்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா தொற்று உறுதியாகும் சதவீதம் 0.52% லிருந்து 0.73% ஆக அதிகரித்துள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு தமிழகத்திலும் மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  • பரிசோதனைகளை அதிகரித்தல்
  • கூட்டுத் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து கட்டுப்படுத்துதல்
  • மரபணு மாறிய புதிய கோவிட் வகை பரவுகிறதா என கண்டறிய மரபணு பகுப்பாய்வு செய்தல்

ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ளவும். முதல்தவணை, இரண்டாம் தவணை மற்றும் தகுதியானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com