தெருக்களில் அலைந்த நாய்க் கூட்டம் - புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் தடுப்பூசி முகாம்

தெருக்களில் அலைந்த நாய்க் கூட்டம் - புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் தடுப்பூசி முகாம்
தெருக்களில் அலைந்த நாய்க் கூட்டம் - புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் தடுப்பூசி முகாம்
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைந்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அங்குள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அதனைச் சுற்றி ஏராளமான கிராமங்களும் அமைந்துள்ளன. குறுகிய சாலைகளாக அமைந்துள்ள களக்காடு மெயின் பஜார் பகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் அளவுக்கதிகமான நாய்கள் பெருகியுள்ளன. இந்த நாய்கள் அனைத்தும் தெருவில் அங்கும் இங்குமாக அலைவது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றுக்கும் இடையே சண்டைகளையும் போட்டு வருகின்றன. சண்டையிடும் போது ஒரு நாய்க்கு ஒரு நாய் கடிப்பதால் அதிலிருந்து காயங்கள் ஏற்பட்டு பின்பு நாய்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நாய்கள் வெறிநாயாக மாறுகின்றன. 
மேலும் இந்த நாய்கள் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தெருக்களில் செல்லும் பெரியவர், சிறியவர், பெண்களையும், மாணவர்களையும் கடித்து குதறிவருகின்றன. தொடர்ந்து கடித்து வருவதால் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று பின்பு குணமடைந்துள்ளனர்.
இந்த செய்தி கடந்த வாரம் புதிய தலைமுறை செய்தி வெளியான நிலையில், திருநெல்வேலி கால்நடை இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் களக்காடு பேருந்து நிலையத்தில் வைத்து நாய்களுக்கு சிறப்பு தடுப்பு ஊசி போடும் பணியை தொடங்கினர். தடுப்பூசி போடும் முகாமில் ஏராளமான வளர்ப்பு நாய்கள் பொது மக்களால் கொண்டுவரப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com