\
வெறி நாய்
வெறி நாய்PT

செங்கல்பட்டு | ஒரே நாளில் 4 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை கடித்த வெறிநாய்!

சமீபத்தில் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
Published on

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவரது மகன் ஜெஃப்ரின் (4), தங்கள் வீட்டின் எதிரில் விளையாடி கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு வெறிநாய் சிறுவனின் வலது தோள்பட்டை பகுதியில் பலமாக கடித்துள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவன் கதறி துடித்துள்ளான்.

நாய்
நாய்free pik

அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வெறி நாய்
82 வயது கேரள முதியவர் கொலை வழக்கு: ‘தெகிடி’ பாணியிலான மோசடியில் ஈடுபட்டு சிக்கிய நிறுவன மேலாளர்!

பின் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரையும் வலது காலில் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடிள்ளது. இப்படி ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு பேரை நாய் கடித்து இருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உலா வரும் தெரு நாய்களை பிடிக்க துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com