ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டது என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்.12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதால் டிடிவி தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வலியுறுத்தியிருந்தார். நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு டிடிவி தினகரன் மனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவித்தார்.