தமிழ்நாடு
ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது; தீவிரமாக பணியாற்றுகிறோம்- ஆர்.பி. உதயகுமார்
ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது; தீவிரமாக பணியாற்றுகிறோம்- ஆர்.பி. உதயகுமார்
மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த கால வெள்ள பாதிப்புகளை அனுபவமாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்காதது பற்றி ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார் “வெளிநாடுகளுக்கு செல்வதை விட ஸ்டாலின் விரும்பினால் விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் சிகிச்சை பெறலாம்” எனத் தெரிவித்தார்.