rajinikanth
rajinikanthpt desk

”உங்களுக்கு எப்போது குடிக்க தோன்றுகிறதோ அப்போ இதை செய்யுங்க; 12 நாளில் சரியாகிடும்?“ - ரஜினிகாந்த்

ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தினமும் குடிக்காதீர்கள் உடல் கெட்டுப் போவதுடன் குடும்பமும் கெட்டுப் போய்விடும் என்று பேசினார்.
Published on

ரஜினிகாந்த் பேசும்போது, “தினமும் குடிக்காதீர்கள் உடல் கெட்டுப் போய்விடும், குடும்பமும் கெட்டுப் போய்விடும். நான் தினமும் குடித்துக் கொண்டு இருந்திருந்தால் எப்போதோ மேலே போயிருப்பேன்.

குடிப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. உங்களுக்கு எப்போது குடிக்க தோன்றுகிறதோ? அந்த நேரத்தில் உணவருந்தி விடுங்கள் 12 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.

jailer movie poster
jailer movie posterpt desk

அதற்காக உங்களை குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எப்போதாவது குடியுங்கள் சந்தோஷத்திற்காக குடியுங்கள். நான் குடித்ததனால் நிறைய இழந்திருக்கிறேன். அனுபவத்தில் சொல்கிறேன்.

தினமும் குடிப்பதால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. உடல் கெட்டுப் போவதுடன் குடும்பமும் கெட்டுப் போய்விடும். மனைவி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com