க்யூஆர்கோடு டோக்கன் வழங்கிய விவகாரம் - அதிமுக வட்டச்செயலாளரிடம் விசாரணை

க்யூஆர்கோடு டோக்கன் வழங்கிய விவகாரம் - அதிமுக வட்டச்செயலாளரிடம் விசாரணை

க்யூஆர்கோடு டோக்கன் வழங்கிய விவகாரம் - அதிமுக வட்டச்செயலாளரிடம் விசாரணை
Published on

சென்னை மயிலாப்பூரில் க்யூ ஆர் கோடு டோக்கன் வழங்கிய அதிமுக வட்டச் செயலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9-வது மண்டல பறக்கும்படை தேர்தல் அதிகாரி தேவகுமாரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலீசார் மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த 124-வது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் போது மடக்கி பிடித்தனர்.

அவரிடம் தேர்தலுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு QR குறியீடு கொண்ட அதிமுக சின்னம் ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கதுரையை மயிலாப்பூர் போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com