மயிலை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையிடம் சேர்த்த மக்கள்

மயிலை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையிடம் சேர்த்த மக்கள்

மயிலை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையிடம் சேர்த்த மக்கள்
Published on

நெல்லையில் மயிலை விழுங்க முயன்ற சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணபெருமாள். இவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இவரது வயலில் இன்று மாலை மயில் ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு பிடிபட்ட தகவலை தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதாக கொண்டு சென்றனர். அவர்கள் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com