தமிழ்நாடு
மலைப்பாம்பு உள்ளதால் ஆற்றுக்கு செல்ல மக்கள் அச்சம்
மலைப்பாம்பு உள்ளதால் ஆற்றுக்கு செல்ல மக்கள் அச்சம்
கன்னியாகுமரி அருகே கால்வாயில் மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே குடியிருப்புக்கு அருகேயுள்ள ஓடையில் சுற்றி வரும் மலைப்பாம்பை பிடிக்க வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பரளி ஆற்றின் கால்வாயில் 3 நாட்களுக்கு முன் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.
வனத்துறைக்கு தகவல் அளித்தும் பாம்பை பிடிக்க அவர்கள் வரவில்லை. அதனால், ஆற்றில் குளிக்க, தண்ணீர் எடுக்க செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பாம்பை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபடவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் அறிவித்துள்ளனர்.