காலை 11 மணிக்கு புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காலை 11 மணிக்கு புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காலை 11 மணிக்கு புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், புழல் ஏரியிலிருந்து படிப்படியாக நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என்பதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. மேலும், மாத்தூர் கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com