சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்:பொதுப்பணித்துறை

சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்:பொதுப்பணித்துறை

சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்:பொதுப்பணித்துறை
Published on

சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 801 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் தற்போது ஆயிரத்து 410 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சென்னைக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொடர் ‌மழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் 3 வது நாளாக இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. கடல் சீற்றம் மற்றும் கன மழை அறிவிப்பை அடுத்து அவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் கடல் சீற்றம் தொடர்வதால் காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பழவேற்காடு மற்றும் ஆரம்பாக்கம் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com