தமிழ்நாடு
புதுவை அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது: கிரண் பேடி
புதுவை அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது: கிரண் பேடி
புதுச்சேரி அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் மழைநீர் தேங்கியிருந்த ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், பூமியான்பேட்டை, பாவாணர் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மழை பாதிப்பு குறித்து மக்களிடமும் கிரண்பேடி கேட்டறிந்தார்.