புதியதலைமுறை செய்தி எதிரொலி -மாணவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி

புதியதலைமுறை செய்தி எதிரொலி -மாணவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி
புதியதலைமுறை செய்தி எதிரொலி -மாணவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி


நாமக்கல் மாவட்டத்தில் புதிய தலைமுறை செய்தி எதிரொலியால், ஸ்மார்ட் போன் இல்லாமல் தவித்து வந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தையல் தொழிலாளியான தமிழரசி. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தமிழரசி செய்து வரும் தையல் தொழில் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே குடும்பத்திற்கான ஆதாரம். மூத்த மகள் செளந்தர்யா அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு பயின்று வரும் நிலையில், 10 ஆம் வகுப்புத் தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்த இராண்டாவது மகள் சுபசெளமியா 11 ஆம் வகுப்பில் சேர்ந்து பயின்று வந்தார்.

ஊரடங்கு காரணமாக ஆன்லைன் கல்வி நடைமுறையில் உள்ளதால் ஸ்மார்ட் போன் அத்தியாவசியத் தேவையாக மாறியது. ஆனால் வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் மட்டுமே இருந்ததால் அதனை பட்டப்படிப்பு பயிலும் செளந்தர்யா உபயோகித்து வந்தார். தொலைக்காட்சி வழியாக பாடங்களை கற்று வந்த சுப செளமியாவுக்கு, ஸ்மார்ட் போன் மூலம் ஆசிரியர்கள் அனுப்பும் வீட்டுப்பாடங்களைப் பெறுவதில் சிக்கல் நிலவியதாகத் தெரிகிறது.

குழந்தைகள் நன்றாக பயின்ற போதும், அவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என தமிழரசியும் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்தானச் செய்தி நேற்று புதியதலைமுறையில்  ஒளிப்பரப்பட்டது. இந்தச் செய்தியைப் பார்த்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் சுபசெளமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com