புதிய தலைமுறையின் நேர்காணல்கள்: தாக்கம் ஏற்படுத்திய தருணங்கள்

புதிய தலைமுறையின் நேர்காணல்கள்: தாக்கம் ஏற்படுத்திய தருணங்கள்

புதிய தலைமுறையின் நேர்காணல்கள்: தாக்கம் ஏற்படுத்திய தருணங்கள்
Published on

புதிய தலைமுறையின் பல்வேறு நேர்காணல்கள் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்கள் ஏராளம். 

பிளவுபட்டிருந்த அதிமுக இன்றைக்கு ஒன்றுபட்டிருக்கிறது. பிளவுற்றிருந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன், இரு அணியினரும் ஒன்றாக இணையப் போகிறோம் என்று தெரிவித்தால், நான் கட்சியை விட்டு வெளியேறும் மனநிலையிலேயேதான் இருப்பதாகத் தெரிவித்தார். அவரது இந்த கருத்து, அடுத்தடுத்த நாட்களின் ‌அரசியல் காட்சிகளை தீர்மானித்தது.

நடிகர் கமல்ஹாசன், சினிமா தவிர்த்து முழுக்கவும் அரசியல் பேசிய முதல் நேர்காணல் புதிய தலைமுறையில்தான் ஒளிபரப்பானது. அக்னிப் பரிட்சையில் அவர் பேசிய அரசியல் கருத்துகள் கிளப்பிய அனலின் தாக்கம் இன்றுவரை தணியவே இல்லை. தமிழக ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கான எதிர்வினை‌ முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டது. மேலும் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது பல வழக்குகளும் பாய்ந்தன.

முத்தலாக் விவகாரம் உச்சத்தில் இருந்த நேரம். ‌‌முத்தலாக்கிற்கு ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையில், முத்தலாக் ஒழிக்கப்பட வேண்டும் என புதிய தலைமுறை நேர்காணலில் குஷ்பு கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்ததோடு, அது தொடர்பான விவாதத்தையும் எழுப்பியது‌.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட கருத்து பின்னாளில் அக்கட்சியின் எதிர்காலத்தையே பதம் பார்த்துள்ளது. அந்தக் கருத்தை முதன்முதலில் புதிய தலைமுறை வாயிலாகத்தான் தெரிவித்தார். 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போது தமிழகத்தில் தலைமைப் பொறுப்புக்கு தமிழன்தான் வர வேண்டும் ‌என தமிழ்த்தேசிய அமைப்புகள் கூறி வந்தன. இதுபற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் புதிய தலைமுறை நேர்காணலில், முடிந்தால் மோதிப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்தார். ‌இ‌தற்கு திரைத்துறையினர் ஒரு பிரிவினர் மட்டுமல்லாது, தமிழ்த்தேசிய அமைப்புகளும் கடுமையான எதிர்வினையாற்றின.

ஜெயலலிதா இருந்த வரை அமைதிக்கு இலக்கணமாகக் கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தனி ஆவர்த்தனம் தொடங்கினார். அன்று இரவே புதிய தலைமுறையின் தொலைபேசி நேர்காணலில் அதுவரைதான் வெளியிடாத பல புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அக்னிப் ‌பரிட்சை நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில் அ‌திர்வலைகளை ஏற்படுத்தின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com